×

நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் ஐபோன் ஏற்றுமதி உச்சம் : ஃபாக்ஸ்கான் ஆலையில் 65% விஸ்ட்ரான் ஆலையில் 24% ஐபோன்கள் உற்பத்தி!!

சென்னை : நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் இந்தியாவில் இருந்து 2 பில்லியன் டாலர் மதிப்புடைய ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உலகின் முன்னணி டெக் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது கால்தடத்தை வலுவாக பதிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவில் சொந்தமாக ஐபோன் தயாரிக்க தொழிற்சாலையையும் நிறுவியதோடு தங்களது கருவிகளை உற்பத்தி செய்வதிலும் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலான 2 பில்லியனுக்கும் அதிகமான, அதாவது ரூ.1.67 லட்சம் கோடி மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி என்பது நாட்டின் மொத்த உற்பத்தியில் 81% ஆகும். நடப்பு நிதியாண்டில் மொத்த ஐபோன்களில் 65%த்தை சென்னை அருகே உள்ள ஆலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்னை அருகே பெகட்ரான் ஆலையில் 11% ஐபோன்களும் விஸ்டரான் ஆலையில் 24% ஐபோன்களும் தயாரிக்கப்படுகின்றன.

The post நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் ஐபோன் ஏற்றுமதி உச்சம் : ஃபாக்ஸ்கான் ஆலையில் 65% விஸ்ட்ரான் ஆலையில் 24% ஐபோன்கள் உற்பத்தி!! appeared first on Dinakaran.

Tags : Foxconn plant ,Wistron ,Chennai ,India ,Apple ,Foxconn ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...