×

போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவாரா?.. எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்

பெங்களூரு: பாலியல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த பிப்.2ம் தேதி கல்வி விவகாரம் தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்ற போது, அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. உதவி கேட்க சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கில் எடியூரப்பா விசாரணைக்கு இன்று ஆஜராக சிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. டெல்லியில் உள்ள எடியூரப்பா வழக்கு விசாரணைக்காக இதுவரை சிஐடி முன் ஆஜராகவில்லை. சிஐடி சம்மன் குறித்தும் எடியூரப்பா தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனிடையே எடியூரப்பாவை கைதுசெய்யக் கோரி சிறுமியின் பெற்றோர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக எடியூரப்பா கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

The post போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவாரா?.. எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் appeared first on Dinakaran.

Tags : CIT ,Yeddyurappa ,Bengaluru ,Karnataka ,Chief Minister ,POCSO ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...