×

பா.ஜ.க. தொண்டர்களின் அதீத நம்பிக்கையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம்: ஆர்.எஸ்.எஸ் குற்றசாட்டு

டெல்லி: பா.ஜ.க. தொண்டர்களின் அதீத நம்பிக்கையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம் என ஆர்.எஸ்.எஸ் குற்றசாட்டு வைத்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவியது. உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மத்தியில் ஆட்சி அமைக்க 272எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனித்து அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் நேற்றைய தினம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அங்கு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்தார். இதனை தொடர்ந்து மோடியை மோகன் பகவத் விமர்சித்த நிலையில் இன்று கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,

புதியவர்களுக்கு வாய்ப்பு தந்ததால் தோல்வி: ஆர்.எஸ்.எஸ்

மோடியின் உறுதி என்ற வாசகத்தால் மகிழ்ச்சியில் தொண்டர்கள் திளைத்தார்களே தவிர களத்தில் இறங்கி பணியாற்றவில்லை. பா.ஜ.க. வேட்பாளர்களில் 25 சதவீதத்தினர் கட்சிக்கு புதிதாக வந்தவர்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ். இதழில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு தருவதற்காக சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்களை பா.ஜ.க. தலைமை கைவிட்டுவிட்டது.

பா.ஜ.க.வினரின் அதீத நம்பிக்கையே தோல்விக்கு காரணம்

பா.ஜ.க. தொண்டர்களின் அதீத நம்பிக்கையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம் என ஆர்.எஸ்.எஸ் குற்றசாட்டு வைத்துள்ளது. தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகள் பலரும் வெற்றி கிடைத்துவிடும் என அதீத நம்பிக்கை வைத்ததே தோல்விக்கு காரணம். மராட்டியத்தில் தேவையற்ற அரசியலில் பா.ஜ.க. ஈடுபட்டதும் தோல்விக்கு காரணம் என ஆர்.எஸ்.எஸ். இதழில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மை இருந்த போதும் அஜித் பவார் கட்சியை கூட்டணியில் சேர்த்ததை பா.ஜ.க.வினரை புண்படுத்தியது. அஜித் பவார் தரப்பை சேர்த்துக் கொண்டதால் மராட்டியத்தில் பா.ஐ.க. மதிப்பு குறைந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மோடி செல்வாக்கால் வெற்றி கிடைத்துவிடும் என்று அதீத நம்பிக்கையில் இருந்ததாக ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது. உண்மையான சேவகர் ஆணவத்துடன் செயல்பட மாட்டார் என்று மோடியை மோகன் பகவத் விமர்சித்த நிலையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை பயன்படுத்திக் கொள்ள பா.ஜ.க. தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post பா.ஜ.க. தொண்டர்களின் அதீத நம்பிக்கையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம்: ஆர்.எஸ்.எஸ் குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Lok Sabha elections ,RSS ,Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...