×

திபெத்தில் 30 இடங்களின் பெயர்களை மாற்றுகிறது இந்தியா: எல்லைப் பிரச்சனையில் சீனாவுக்கு நெருக்கடி தர முடிவு?

டெல்லி: சீனாவுக்கு பதிலடி தரும் விதமாக திபெத்தில் உள்ள 3 இடங்களின் பெயர்களை இந்திய ராணுவம் மாற்றி புதிய எல்லைக்கட்டுப்பாட்டு வரைபடத்தை வெளியிட உள்ளது. இந்தியா, சீனா இடையே எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இதை பயன்படுத்தி, இந்திய எல்லையில் சீனா பல ஆண்டுகளாக வாலாட்டி வருகிறது. எல்லை பிரச்சனை நிலவி வரும் நிலையில் அவ்வப்போது இந்திய எல்லைகளை உள்ளடக்கி சீனா வரைபடத்தை வெளியிட்டு வருகிறது.

கடைசியாக அருணாச்சல பிரதேசத்தில் குறிப்பிட்ட சில இடங்களின் பெயர்களையும் மாற்றி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் சுயாட்சி பகுதியில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள் உட்பட 30 இடங்களின் பெயர்களை இந்திய ராணுவம் மாற்றம் செய்து வரைபடம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post திபெத்தில் 30 இடங்களின் பெயர்களை மாற்றுகிறது இந்தியா: எல்லைப் பிரச்சனையில் சீனாவுக்கு நெருக்கடி தர முடிவு? appeared first on Dinakaran.

Tags : India ,Tibet ,China ,Delhi ,Indian Army ,Indian ,
× RELATED நிலவில் அணு மின் நிலையம் இந்தியா-சீனா இணைந்து செயல்பட விருப்பம்!!