×

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பால தடுப்புச்சுவர் அகற்றம்

 

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 12: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பால தடுப்புச்சுவர் அகற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை சாலையில் பூவாணி விளக்கு அருகே பழைய பாலம் இருந்தது. இந்த பாலத்தை விரிவுபடுத்தி புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் அந்த பாலம் விரிவாக்கப்பணிகள் முடிவடைந்தன. ஆனால் பழைய பாலத்தின் தடுப்புச்சுவர் அகற்றப்படாமல் இருந்ததால் குறுகலாக இருந்தது.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருந்தது. இதனால் பழைய பாலத்தின் சுற்றுச்சுவரை இடித்து அகற்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து பழைய பாலத்தின் தடுப்புச்சுவர்கள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. தற்போது பாலம் அகலமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் எளிதாக சென்று வருகின்றன. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பால தடுப்புச்சுவர் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur ,Bhuvani Lamp ,Madurai Road ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு