×

ஓய்வுபெறும் உயர் அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு, சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது: பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் ஒப்பந்ததாரர்களின் முதல் பொதுக்குழு மற்றும் பொதுக்கூட்டம் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் தலைவர் குணமணி தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் சங்கத்தின் தலைவர் குணமணி நிருபர்களிடம் கூறியதாவது: இனிவரும் காலங்களில் ஓய்வுபெறும் உயர் அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு மற்றும் சிறப்பு அந்தஸ்து பதவி வழங்கக்கூடாது.

இதனால் பதவி உயர்வு பெறும் பொறியாளர்கள் மற்றும் புதிய பொறியாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதேபோல் உயர் பொறியாளர்களின் சூழ்ச்சியால் மீண்டும் பேக்கேஜ் டெண்டர் அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வர், அமைச்சர் தலையிட்டு பேக்கேஜ் டெண்டரை ரத்து செய்ய வேண்டும். பெண் பொறியாளர்களை சென்சிடிவ் பதவியில் அமர்த்த வேண்டாம் என அரசுக்கு வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஓய்வுபெறும் உயர் அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு, சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது: பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Public Works and Highways Contractors Association ,CHENNAI ,Rayapetta, Chennai ,Gunamani ,President ,Public Works Contractors and Highway Contractors Association ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி ஏன்?...