×

தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு திராவிட சித்தாந்தம் பற்றி பயிற்சி: நடிகர் சத்யராஜ் பேச்சு

திருவெறும்பூர்: திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாநகர ஓட்டுநர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பெல் கம்யூனிட்டி ஹாலில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிகர் சத்யராஜ் பேசியதாவது: தமிழகத்தில் கல்வியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

நார்வேயில் நாத்திகம் அதிகம். அதனால் தான் அவர்கள் சுகமாக உள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் 50 லட்சம் பேர் வேலைக்கு வருகின்றனர். காரணம் அங்கு கல்வித்தரம் சரியாக இல்லை. அவர்களுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை போன்ற திராவிட சித்தாந்தங்கள் பற்றி சொல்லி பயிற்சி அளிக்க வேண்டும். வடமாநிலங்களுக்கும் திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சி அப்போதுதான் அவர்களுக்கு புரியும்.

உபியில் பாதிக்கு பாதி தான் பெற்றிருக்கிறார்கள். திராவிடம் தெரிந்திருந்தால் முழுமையும் பெற்று வந்திருக்கலாம். கோவையில் அவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு திராவிடம் பற்றியும், சித்தாந்தம் பற்றியும் எடுத்து கூறுவதற்கு ஆட்களை நியமிக்க வேண்டும். நான் உதவ தயார். அசாம், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு திராவிட மாடலை கொண்டு செல்ல வேண்டிய கருவியாக நான் இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு திராவிட சித்தாந்தம் பற்றி பயிற்சி: நடிகர் சத்யராஜ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : NORTHERN STATE ,SATYARAJ ,Thiruverampur ,Artist Centennial Completion Ceremony ,Dimuka Municipal Driving Team ,Trichy ,Southern ,District ,Bell Community Hall ,Education Minister ,Anbil Mahesh ,Dravita Idethanam ,Northern ,Tamil Nadu ,Sathyaraj ,
× RELATED தேர்தல் முடிவடைந்ததால் திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்