×

பக்ரீத் பண்டிகை ரூ.6.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேலூர், சிவகங்கை, நெல்லை, தென்காசி சந்தையில் ரூ.6.50 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் 1000க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஒரே நாளில் ரூ.1.50 கோடி விற்பனை நடந்ததாக வியாபாரிகள் கூறினர். இதேபோல சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில், மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வந்தன. நேற்று மட்டும் அங்கு விற்பனை ரூ.1 கோடியை தாண்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர். நெல்லை மேலப்பாளையம் சந்தையில் அதிகபட்சமாக ஒரு ஆடு ரூ.80 ஆயிரத்துக்கு விலை போனது. நேற்று ஒரே நாளில் இங்கு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் கடையத்தில் நேற்று நடந்த சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

The post பக்ரீத் பண்டிகை ரூ.6.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Bakrit festival ,CHENNAI ,Vellore ,Sivagangai ,Nellai ,Tenkasi ,Poikai ,Dinakaran ,
× RELATED தியாகத்திற்கு ஒரு திருநாள்…!