×

பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

தேவையான பொருட்கள் :

பப்பாளி பழ துண்டுகள் – 1 கப்
ஆரஞ்சு – 1
வாழைப்பழம் – 3 துண்டு
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
உப்பு – சிட்டிகை
தேன்- தேவையான அளவு
மிளகுத் தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை :

ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.மிக்சியில் ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை சாறு, பப்பாளி பழத்துண்டுகள், வாழைப்பழம்,உப்பு, தேன், ஐஸ்கட்டி சேர்த்து மிக்ஸியில் இட்டு அடித்துக் கொள்ளவும்.அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி பருகலாம்.பப்பாளி ஆரஞ்சு ஜூஸ் ரெடி!

The post பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED முகப்பருக்கள் உணர்த்தும் பிரச்னைகள்!