×

நெல்லையில் உரிமம் பெறாத விளம்பரப் பலகைகளை அகற்ற உத்தரவு..!!

நெல்லை: நெல்லையில் உரிமம் பெறாத விளம்பரப் பலகைகளை 7 நாட்களுக்குள் அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. விளம்பரப் பலகை, இரும்பு சட்டங்களை அகற்ற நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் உத்தரவிட்டுள்ளார். அப்புறப்படுத்தாத பலகைகளை நிர்வாகமே அகற்றி செலவுகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கும். பலகைகளை அகற்றாதோர் மீது வழக்கு தொடர்ந்து 3 ஆண்டு சிறை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

The post நெல்லையில் உரிமம் பெறாத விளம்பரப் பலகைகளை அகற்ற உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Rice ,Municipal Commissioner ,Thackeray Subam Ghanadev ,
× RELATED மழை நீர் வடிகால் பணிகள்...