×

உத்தரபிரதேச மாநிலம் மண்டோலா பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் டெல்லியில் மின்தடை: அமைச்சர் அதிஷி

டெல்லி: டெல்லியில் பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 1500 மெகா வாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் அதிஷி தகவல் அளித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “டெல்லியின் பல பகுதிகளில் பிற்பகல் 2.11 மணி முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. உ.பி.யின் மண்டோலாவில் உள்ள பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (பிஜிசிஐஎல்) துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்துதான் இதற்குக் காரணம்.

மண்டோலா துணை மின்நிலையத்திலிருந்து டெல்லி 1200 மெகாவாட் மின்சாரத்தைப் பெறுகிறது, அதனால் டெல்லியின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது படிப்படியாக பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் திரும்பி வருகிறது.

ஆனால் தேசிய மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் தோல்வி மிகவும் கவலையளிக்கிறது. இதுபோன்ற நிலை மீண்டும் நிகழாமல் இருக்க, மத்திய மின்துறை அமைச்சர் மற்றும் பிஜிசிஐஎல் தலைவர் ஆகியோரிடம் நேரம் கேட்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post உத்தரபிரதேச மாநிலம் மண்டோலா பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் டெல்லியில் மின்தடை: அமைச்சர் அதிஷி appeared first on Dinakaran.

Tags : Fire ,Mandola ,Uttar Pradesh ,Delhi ,Minister ,Adashi ,Adishi ,Dinakaran ,
× RELATED இருளில் மூழ்கியது டெல்லி