×

தமிழகத்தில் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 51,838 புகார்கள் பதிவு..!!

சென்னை: ஜனவரி 2024 முதல் இதுவரை தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 51,838 புகார்கள் பதிவாகியுள்ளது. 40,150 பணம் தொடர்பான மோசடி புகார்கள், 11,000 ஆன்லைன் மிரட்டல் புகார்கள் பதிவாகியுள்ளன. சைபர் கிரைம் மோசடியில் ரூ.559 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைமில் ஈடுபட்ட 114 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகார்களில் Fed ex கொரியர் பெயரிலான மோசடி முதலிடத்தில் உள்ளதாக மாநில சைபர் கிரைம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 51,838 புகார்கள் பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...