×

தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20ம் தேதி கூடும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

நெல்லை: ஜூன் 20-ம் தேதியே சட்டப்பேரவை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில்; துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நாட்கள் குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஜூன் 20-ம் தேதியே சட்டப்பேரவை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்;

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் காரணமாக ஜூன் 24ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 20ஆம் தேதி சட்டமன்றம் கூடும். சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். விளவங்கோடு தொகுதியில் வென்ற தாரகை கத்பட் நாளை காலை பதவியேற்கிறார். விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தாரகை கத்பர்ட் நாளை எம்.எல்.ஏ.வாக உறுதிமொழி ஏற்க உள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

The post தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20ம் தேதி கூடும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Nella ,Speaker ,Tamil Nadu Legislative Affairs Committee ,Dad ,
× RELATED முன்னாள் படைவீரரின் மனைவிக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும்