×

கைகாட்டி பகுதியில் குரங்குகள் தொல்லை

 

ஊட்டி, ஜூன் 11: ஊட்டி அருகேயுள்ள கைகாட்டி பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஊட்டி-மஞ்சூர் செல்லும் சாலையில் கைகாட்டி பகுதி உள்ளது. மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் செல்லும் அனைத்து வாகனங்கள், அரசு பஸ்கள் இந்த வழியாகவே சென்று வருகின்றன. ஊட்டி, குன்னூர் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கைகாட்டி பகுதியில் பஸ்சிற்காக காத்திருப்பது வழக்கம்.

இதனால், இப்பகுதியில் டீ கடைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. வனத்தை ஒட்டி அமைந்துள்ளதால் காட்டு எருமை, குரங்குகள் மற்றும் பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. சமீப காலமாக இப்பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் உள்ள கடைகளில் இருக்கும் வாழைப்பழம், கடைகளில் உள்ள திண்பண்டங்களை எடுத்து தின்று விடுகின்றன. மேலும், அப்பகுதியில் பஸ்சிற்காக காத்திருக்கும் பொதுமக்களிடமும் தொந்தரவு செய்கின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.

The post கைகாட்டி பகுதியில் குரங்குகள் தொல்லை appeared first on Dinakaran.

Tags : Ooty ,Kaigatti ,Ooty-Manjoor road ,Manjoor ,Dinakaran ,
× RELATED புலி நடமாட்ட தகவலால் தடை...