×

மழைநீரை வீணாக்காமல் கோவை குளங்களில் முழு அளவில் தண்ணீர் சேமிக்க வேண்டும்

 

கோவை, ஜூன் 11: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குறிச்சி குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகள் நவீன இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் ேநற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வுசெய்தனர். இப்பணியை விரைவாக முடிக்க, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில்,“மழைநீரை குளங்களில் முழுமையாக சேமிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள கிருஷ்ணாம்பதி குளம், செல்வம்பதி குளம், குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் மற்றும் குறிச்சி குளம் ஆகிய குளங்களில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகள் முற்றிலும் அகற்றப்படும்’’ என்றார்.

இதனைத்தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நேற்று திறந்ததால், குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் கலெக்டர் மற்றும் மேயர் ஆய்வுசெய்தனர். பின்னர், மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினர்.  இந்த ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன் மாநகராட்சி உதவி கமிஷனர் இளங்கோவன், மாநகராட்சி நல அலுவலர் கே.பூபதி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாநகராட்சி மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் பாபு, அகமது கபீர், இளஞ்சேகரன், அஸ்லாம் பாஷா, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மழைநீரை வீணாக்காமல் கோவை குளங்களில் முழு அளவில் தண்ணீர் சேமிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kurichi Pond ,Coimbatore South Zone ,District Collector ,Krantikumar Badi ,Municipal ,Corporation ,Mayor ,Kalpana Anandakumar ,Dinakaran ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்