×

திருநங்கைகளுக்கு 21ம் தேதி சிறப்பு முகாம்

 

கோவை, ஜூன் 11: கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட வருகிற 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திருநங்கைகளுக்கு 21ம் தேதி சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Collector ,Krantikumar Badi ,Chief Minister ,camp for ,
× RELATED வரும் 8ம் தேதி முதல் இந்திய விமானப்படை தேர்விற்கு விண்ணபிக்கலாம்