×

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தால் ஆத்திரம் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி நடுரோட்டில் படுகொலை

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனால் அன்று முதல் இன்று வரை தேர்தலின் வெற்றி கொண்டாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அவ்வாறு கர்னூல் மாவட்டம் வெல்துர்த்தி மண்டலம் பொம்மிரெட்டி கிராமத்தை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி கிரிநாத் சவுத்ரியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வெற்றியை கொண்டாடி உள்ளார்.

இது தொடர்பாக நேற்றுமுன்தினம் இரவு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாமையா, ராமகிருஷ்ணா மற்றும் மற்றும் பலர் இணைந்து தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி கிரிநாத் சவுத்ரியை நடுரோட்டில் ஓட ஓட வெட்டி கொடூரமாக வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சம்பவ இடத்திலேயே கிரிநாத் சவுத்ரி இறந்தார். இந்த சம்பவத்தை தடுக்க வந்த கிரிநாத் சவுத்ரியின் சகோதரர் கல்யாண் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் நடந்தது தெரிந்ததும் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆத்திரமடைந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பைக்கிற்கு தீ வைத்தனர்.

The post தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தால் ஆத்திரம் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி நடுரோட்டில் படுகொலை appeared first on Dinakaran.

Tags : Telugu Desam Party ,Tirumala ,TDP ,Andhra Pradesh assembly elections ,Kurnool ,
× RELATED எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட...