×

ஜெகன்மோகன் வெற்றி பெறுவார் என்று ரூ.30 கோடி பந்தயம் கட்டிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி மர்ம சாவு: கொலையா? போலீஸ் விசாரணை

திருமலை: ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என மாநிலம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு பலர் பந்தயம் கட்டினர். ஆனால் அக்கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியை நம்பி பணம் கட்டியவர்கள் ஏமாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏலுரு மாவட்டம் தூர்பு திகவல்லி கிராமத்தை சேர்ந்த 7வது வார்டு கவுன்சிலரான வேணுகோபால்(52) என்பவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று சுமார் ரூ.30 கோடி வரை பந்தயம் கட்டியுள்ளார். இதற்கு கடன் வாங்கினார். ஆனால் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் வேணுகோபாலுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இவரிடம் பணத்தை கட்டியவர்கள், கடனாக ெகாடுத்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் கடந்த 7ம்தேதி வேணுகோபால் வீட்டுக்குள் புகுந்து ஏசி, சோபாக்கள், படுக்கைகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை அள்ளிச்சென்றனர். இதையறிந்த வேணுகோபால் கடும் வேதனை அடைந்தார். நேற்றுமுன்தினம் அவர் வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் பின்புறமுள்ள பண்ணைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் சடலமாக கிடந்துள்ளார். அவரது தலையில் ரத்தக்காயங்கள் இருந்தது. எனவே அவரை யாரோ அடித்து கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

The post ஜெகன்மோகன் வெற்றி பெறுவார் என்று ரூ.30 கோடி பந்தயம் கட்டிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி மர்ம சாவு: கொலையா? போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : YSR ,Jaganmohan ,Congress ,Tirumala ,Andhra ,Congress Party ,Dinakaran ,
× RELATED ஆந்திராவில் நடுரோட்டில் வழிமறித்து...