×

குரூப் 4 தேர்வு எழுத சென்ற பட்டதாரி பெண் மாயம்

கடலூர், ஜூன் 11: கடலூர் முதுநகர் அருகே உள்ள வசந்தராயன்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் மகள் யுவ (21). இவர் பிஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதில் யுவ கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வீட்டைவிட்டு சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அவர்கள் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குரூப் 4 தேர்வு எழுத சென்ற பட்டதாரி பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Cuddalore ,Karunakaran ,Yuva ,Vasantharayanpalayam Mariamman Koil Street ,Mutunagar, Cuddalore ,Dinakaran ,
× RELATED தளி அருகே மூதாட்டி மாயம்