×

விதை பதப்படுத்தும் இயந்திர கொட்டகை

ஓசூர், ஜூன் 11: ஓசூரில், விதை பதப்படுத்தும் இயந்திர கொட்டகை கட்டுமான பணி ₹53 லட்சம் மதிப்பில் பூமி பூஜையுடன் தொடங்கியது. ஓசூரில் வேளாண் துறை சார்பில், என்ஏடிபி 2023-24 திட்டத்தின் கீழ், ஓசூர்-ராயக்கோட்டை சாலையில், சார் கருவூலம் அருகில் 100 மெட்ரிக் டன் திறன் கொண்ட விதை பதப்படுத்தும் இயந்திரக் கொட்டகை, 1 எம்டி மணி திறன் கொண்ட விதை பதப்படுத்தும் இயந்திர கொட்டகை கட்டுமானப் பணி, ₹53 லட்சம் மதிப்பீட்டில் நேற்று பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்பணிகளை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, மாநகர செயலார் மேயருமான சத்யா ஆகியோர் ெதாடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ராமு, வெங்கடேஷ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இக்ரம் அகமத், வார்டு செயலாளர்கள் நாகராஜ், சிவா, அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post விதை பதப்படுத்தும் இயந்திர கொட்டகை appeared first on Dinakaran.

Tags : Hosur ,Bhumi Puja ,Department of Agriculture ,NADP ,Hosur-Rayakottai Road ,Sar Karooulam ,Dinakaran ,
× RELATED ஓசூர் எம்.ஜி.ரோடு பகுதியில் பிளாஸ்டிக்...