×

நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தும் மத்திய அரசு?.. இன்று நடைபெறும் அமைச்சரவை ஒப்புதல் என தகவல்

டெல்லி: நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களுக்கான துறைகள் இன்று அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் எஎன தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில்; முதல் 100 நாட்கள் அரசின் செயல்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மோடியின் புதிய அமைச்சரவைக் கூட்டத்தில் நெல்லுக்கான ஆதார விலையை 5%-10% உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. முதல் அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

The post நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தும் மத்திய அரசு?.. இன்று நடைபெறும் அமைச்சரவை ஒப்புதல் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Federal Government ,Delhi ,Union Cabinet ,Modi ,Presidential Palace ,Cabinet ,
× RELATED குவைத் மாங்காஃப் பகுதியில் ஏற்பட்ட தீ...