×

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கபப்ட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் 37 ஆயிரத்து 576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதன்படி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் மேல்நிலைப் பள்ளிகள் 3156, உயர்நிலைப் பள்ளிகள் 3094, தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் தொடக்கப் பள்ளிகள் 24350, நடுநிலைப் பள்ளிகள் 6976 பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் 5000, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 3000 என இயங்கி வரும் நிலையில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த ஆண்டு பொதுத்தேர்வுக்கு பிறகு மே மாதம் 1ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகைப்பள்ளிகளும் இன்று (10ம் தேதி) திறக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு முன்னதாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை தூய்மை செய்தல், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவின் பேரில் அனைத்து விலையில்லாப் பொருள்களும் வழங்க தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதனால் இன்று பள்ளிகள் திறந்ததும், பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ மாணவியருக்கும் மேற்கண்ட பொருள்கள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன. இத்துடன், புதிய மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளும் இன்று தொடங்க உள்ளன. இதையொட்டி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வமுடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

The post கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...