×

பெட்ரோல் பங்கில் ரூ.64 ஆயிரம் திருடிய ஊழியர் கைது

 

கோவை. ஜூன் 10: கோவை ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆம்பூர் பகுதியை சேர்ந்த தண்டபாணி (37) என்பவர் பெட்ரோல் போடும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பங்க்கில் வரவு, செலவு கணக்கு ஆய்வு செய்தபோது, கடந்த மே மாதத்தில் இருந்து ரூ.64,000 கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பங்க்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தண்டபாணி பணத்தை கேஷியரிடம் ஒப்படைக்காமல் அங்கிருந்து தலைமறைவானது தெரிய வந்தது. இது குறித்து பெட்ரோல் பங்க் கேஷியர் அஜித் குமார் (25), ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து தண்டபாணியை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.9,000 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெட்ரோல் பங்கில் ரூ.64 ஆயிரம் திருடிய ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,RS Puram DP Road ,Dandapani ,Ambur ,Dinakaran ,
× RELATED தொழிலதிபரிடம் ரூ.9.14 கோடி மோசடி