×

காதல் திருமணமான வேலூர் புதுப்பெண் தற்கொலை சாவில் சந்தேகம் என தந்தை புகார் பெரணமல்லூர் அருகே

பெரணமல்லூர், ஜூன் 10: பெரணமல்லூர் அருகே காதல் திருமணம் செய்த 11 மாதங்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் பலவன்சாத்துக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(46). இவரது இளைய மகள் சந்தியா(19). இவர் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த வில்வராயநல்லூர் கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி 10ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வசித்து வந்தார். இவரது கணவர் பெரணமல்லூர் அடுத்த திருமணி மதுரா வெங்கடேசன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் கோகுலகிருஷ்ணன்(32), மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இருவரும் காதலித்து கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தியாவின் தந்தைக்கு கோகுலகிருஷ்ணன் வீட்டில் இருந்து போன் செய்து, உங்களது மகள் ஐஸ்கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சந்தியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் வெங்கடேசன்பட்டி கிராமத்திற்கு வந்து மகள் இறந்தது குறித்து மாமனார், மாமியார் மற்றும் கணவரிடம் விசாரித்தபோது சரிவர பதில் கூறவில்லையாம். மேலும், அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் சந்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனாலும், அவரது சாவில் மர்மம் உள்ளதாக கருதிய செல்வகுமார் இதுகுறித்து பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையில், இறந்த சந்தியாவின் சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்தனர். இந்நிலையில், இறந்த சந்தியாவிற்கு திருமணமாகி 11 மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடத்துகிறார்.

The post காதல் திருமணமான வேலூர் புதுப்பெண் தற்கொலை சாவில் சந்தேகம் என தந்தை புகார் பெரணமல்லூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Vellore ,Peranamallur ,Selvakumar ,Palavansathikuppam ,Vellore.… ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!