×

நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 18ம் தேதி தொடங்குகிறது

செங்கம், ஜூன் 16: செங்கம் அருகே நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 18ம் தேதி தொடங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 18ம் தேதி அன்று துவங்குகிறது. முதற்கட்ட கலந்தாய்வில் 5 துறைகளையும் சேர்த்து 98 சீட்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 202 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளன.

இதில் சிவில் பாடப்பிரிவில் 52 சீட்டுகளும், மெக்கானிக்கல் பாடப்பிரிவில் 10 சீட்டுகளும், இஇஇ பாடப்பிரிவில் 16 சீட்டுகளும், இசிஇ பாடப்பிரிவில் 48 சீட்டுகளும், கம்யூட்டர் பாடப்பிரிவில் 46 சீட்டுகளும் காலியாக உள்ளதால் வருகின்ற செவ்வாய் கிழமை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. எனவே அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள், அதன் நகல்கள், 3 புகைப்படம் மற்றும் வளர்ச்சி கட்டணம் ₹2352 ஆகியவை எடுத்து கொண்டு கல்லூரிக்கு நேரில் வந்து தங்களுக்கு விருப்பமான பாட பிரிவினை தேர்ந்தெடுத்து கல்லூரியில் பயிலலாம். கல்லூரியில் சேர்ந்து பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ₹1000 வழங்கப்படும். எம்பிசி, பிசி மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளது. இன்னும் ஏராளமான சலுகைகள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்குகிறது என்பதை தாங்களே படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு முதல் கல்லூரியில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடதிட்டங்கள் நான் முதல்வன் பாடதிட்டங்கள் ஆகியவை நடைபெறும். இரண்டாமாண்டு மாணவர்களுக்கு ஒரு மாத கால தொழிற்சாலைக்கு அனுப்பி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்குண்டான முழு செலவும் அரசே ஏற்க்கிறது. மூன்றாம் ஆண்டு படித்து முடித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதி என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

The post நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 18ம் தேதி தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Nagapadi Government Polytechnic College ,Sengam ,Tiruvannamalai District ,Dinakaran ,
× RELATED செங்கம் செய்யாற்றில் ஆக்கிரமிப்புகள்...