×

அரசு பள்ளிகளில் தூய்மை பணி

கெங்கவல்லி , ஜூன் 10: கோடை விடுமுறைக்கு பின்பு இன்று(10ம் தேதி) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தீவிர துப்புரவு பணி நடைபெற்றது. கெங்கவல்லி வட்டாரத்தில் நடைபெற்ற பணிகளை வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீனிவாஸ் தலைமையில், மேற்பார்வையாளர்(பொ) ராணி மற்றும் அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் கூறுகையில், 50 நாள் விடுமுறைக்கு பின்பு மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்கும் வகையில் முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்த்துறை அமைச்சர் உத்தரவின்பேரில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளே புத்தகம் உள்ளிட்ட அனைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

The post அரசு பள்ளிகளில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Salem district ,District Education Officer ,Srinivas ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் வலசையூர் அருகே...