×

ஏட்டு மகன் விபத்தில் பலி

சேலம், ஜூன் 16: சேலம் ஜாகீர் சின்ன அம்மாப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெள்ளையன். ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மகேஷ் அரவிந்த்(25). ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2ம்தேதி இரவு 10 மணியளவில் டூவீலரில் நகரமலை அடிவாரம் அழகுவிநாயகர் கோயில் தெருவில் வந்தபோது, அவ்வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. பலத்த காயம் அடைந்து மயக்க நிலையில் கிடந்தவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மகேஷ்அரவிந்த் இறந்து போனார். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏட்டு மகன் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Zakir Chinna Ammappalayam ,Mariyamman Koil Street, Villiyan ,Athur Town Police Station ,Mahesh Aravind ,
× RELATED நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார்