×

கோயில் திருவிழா குறித்த பேச்சுவார்த்தை தோல்வி

சேந்தமங்கலம், ஜூன் 10: எருமப்பட்டி அருகே கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எருமப்பட்டி ஒன்றியம், கஸ்தூரிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த 2018ம் ஆண்டு திருவிழாவின் போது, இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால், அதன் பின்னர் திருவிழா நடத்தப்படாமல் உள்ளது. இந்த வாரம் திருவிழா நடத்த, ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர். அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, சேந்தமங்கலம் தாசில்தார் சக்திவேல் தலைமையில், இரு தரப்பினரையும் அழைத்து, நேற்று முன்தினம் மாலை சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்படாததால், அதிகாரிகள் தரப்பிலிருந்து, இரு தரப்பினரும் ஊரில் உள்ள பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து விட்டு வருமாறு தெரிவித்து விட்டனர். இதனால், மற்றொரு தேதியில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோயில் திருவிழா குறித்த பேச்சுவார்த்தை தோல்வி appeared first on Dinakaran.

Tags : Negotiations on temple festival ,Senthamangalam ,Erumapatti ,Erumapatti Union ,Kasthuripatti Village ,Bhagwati Amman Temple ,on the temple festival ,
× RELATED மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு