×

நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கச்சேரி சாலை அருகே கோயில் திருவிழாவுக்காக மைக்செட் வைத்து நேற்று பக்தி பாடல் ஒலிபரப்பினர். அங்கு போதையில் ஒரு ஆசாமி நடுரோட்டில் ‘கருப்பு சாமி’ பாடலுக்கு சாமி வந்தது போல் ஆட்டம்போட்டபடி அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தியும், கையால் தாக்கியும் அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை போதை ஆசாமி 5 நிமிடம் தடுத்து நிறுத்தி கண்ணாடியை கையால் தாக்கியும், எட்டி உதைத்தும் அடாவடியில் ஈடுபட்டார். டிரைவர் பஸ்சை எடுக்க முயன்றபோது, ஒற்றைக்காலால் கிக் விட்டு நிறுத்த முயன்றார். இதில் கால் உடைந்து சாலையிலேயே நிலை தடுமாறி விழுந்து, தவழ்ந்து நழுவி சென்றார். இந்த காட்சியை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

The post நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது appeared first on Dinakaran.

Tags : Asami ,Audi ,Nadurot ,Mayiladuthura ,Mayiladuthura Concert Road ,Assami ,Sami ,Azami ,
× RELATED ஆடி கிருத்திகையை முன்னிட்டு காஞ்சியில் காவடி தயாரிப்பு பணி மும்முரம்