×

பாஜ கொடி கட்டிய ஜீப் மோதி 3 பேர் பலி

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மண்டபசாலை பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள டீக்கடை முன்பு சிலர் நேற்று மாலை 5 மணியளவில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மதுரை – வாலிநோக்கம் நெடுஞ்சாலையில், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற பாஜ கட்சிக்கொடி கட்டிய ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, டீ கடையில் நின்றவர்கள் மற்றும் பேரிகார்டில் மோதி, சாலையில் தாறுமாறாக ஓடி மின்சாரம் கம்பத்தில் மோதி நின்றது.

இதில் செங்குளம் கிராமத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரி காளிமுத்து(54), விவசாயி விஜயராமன்(53) சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த மற்றொரு விவசாயி மூக்கையா(50), அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி தப்பியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

The post பாஜ கொடி கட்டிய ஜீப் மோதி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Mandapasalai ,Virudhunagar district ,Madurai-Valinokkam highway ,Ramanathapuram district ,Sayalkudi ,Madurai ,BJP ,
× RELATED திருச்சுழி அரசு மருத்துவமனையில்...