×

ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு

மும்பை: மும்பையில் ஒரே ஓடு பாதையில் ஒரு விமானம் பறக்கத் தயாரான போது மற்றொரு விமானம் தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. ஓடுபாதையில் வேகமாக சென்று மேலெழுப்ப தயாரான போது, அதே ஓடுபாதையில் இந்தூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரை இறங்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், வீடியோவில் 2 விமானங்களும் ஒரே ஓடுபாதையில் காணப்படுகின்றன.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்து அனுமதி கிடைத்த பிறகுதான் தங்கள் விமானம் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இண்டிகோ நிறுவனமும், தங்கள் விமானம் தரைஇறங்க அனுமதி தரப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த இரு விமானங்களில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை விசாரணையை துவங்கியுள்ளது. முதல் கட்டமாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

The post ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai Airport ,Mumbai ,Air India ,
× RELATED பயணியின் உணவில் பிளேடு இருந்தது உண்மை தான்: உறுதி செய்தது ஏர் இந்தியா