×

பழைய பஸ் பாஸிலேயே மாணவர்கள் பயணிக்கலாம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்கள், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பஸ் பாஸை காட்டி பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர ஒவ்வொரு ஆண்டும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பஸ் பாஸ் வழங்க முடியாது என்பதால் மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தியும், பள்ளி சீருடையில் இருந்தால் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் எனவும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி கல்வித் துறையுடன் இணைந்து கட்டணமில்லா பயண அட்டையை இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளி துவங்கும் நேரம், முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

The post பழைய பஸ் பாஸிலேயே மாணவர்கள் பயணிக்கலாம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED குத்தகை முறையில் ஓட்டுனர்,...