×

திருப்பதி மலைப்பாதையில் வேருடன் சாய்ந்த மரம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் இரண்டாவது மலை பாதையில் மூன்றாவது கிலோ மீட்டர் அருகே நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வேருடன் மரக்கிளைகள் சாய்ந்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக தகவல் அறிந்த வனத்துறை மற்றும் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வேறு எங்காவது மரக்கிளைகள் விழுந்தால் அதனை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருப்பதி மலைப்பாதையில் வேருடன் சாய்ந்த மரம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati Eyumalayan temple ,Forest Department ,Devasthan ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி...