×

கடந்த வாரம் பங்குகளின் விலை உயர்ந்ததால் 8 பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3,28,116.58 கோடி உயர்ந்தது

மும்பை: கடந்த வாரம் பங்குகளின் விலை உயர்ந்ததால் 8 பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3,28,116.58 கோடி உயர்ந்தது. கடந்த வாரத்தில் பங்குகள் விலை உயர்ந்ததால் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 3.6 சதவீதம் வரை அதிகரித்தன. பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பில் அதிக ஏற்றம் கண்டவை டிசிஎஸ், இந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் ஆகும். கடந்த வாரம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சந்தை மதிப்பு ரூ.80,828 கோடி அதிகரித்து ரூ.14,08,485 கோடியாக அதிகரித்தன. இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவன சந்தை மதிப்பு ரூ.58,258 கோடி உயர்ந்து ரூ.6,05,407.43 கோடியாக அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிபு ரூ.54,024 கோடி அதிகரித்து ரூ.19,88,741.47 கோடியாக உயர்ந்துள்ளது. இன்ஃபோசிஸ் சந்தை மதிப்பு ரூ.52,770.59 கோடியும் எச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.32,241.67 கோடியும் உயர்ந்தது. ஐடிசி சந்தை மதிப்பு ரூ.16,167.71 கோடியும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.1,745.48 கோடியும் உயர்ந்துள்ளன.

The post கடந்த வாரம் பங்குகளின் விலை உயர்ந்ததால் 8 பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3,28,116.58 கோடி உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிவு..!!