×

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே

புதுடெல்லி: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் இன்று காங்கிரஸ் தலைவர் கார்கே பங்கேற்கிறார். டெல்லியில் இன்று நடைபெறும் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ‘இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காது என்று யாரும் நினைக்க வேண்டாம். நடப்பதை இந்தியா கூட்டணி உன்னிப்பாக கவனித்து வருகிறது. நேரம் வரும்போது இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும்.

மோடியின் பதவியேற்பு விழாவை திரிணாமுல் புறக்கணிக்கும்’ என்றார். இந்நிலையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொள்கிறார். ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கார்கே கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியா கூட்டணி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

The post பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே appeared first on Dinakaran.

Tags : Congress ,President ,Karke ,Modi ,New Delhi ,Trinamool Congress ,Delhi ,Mamta Banerjee ,India ,Dinakaran ,
× RELATED செல்வபெருந்தகையை விமர்சித்த அண்ணாமலை...