×

தஞ்சாவூர் ரயில்வே கீழ்பாலத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூர், ஜூன் 9: தஞ்சாவூர் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் இருந்து பூச்சந்தைக்கு செல்லும் ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை உள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் வெயில் தாக்கம் அதிகம் இருந்து வந்தது. இதனால் தஞ்சாவூர் பகுதியில் மக்கள் பெரும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக மாலை நேரங்களிலும், இரவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் பகுதியில் இருந்து பூச்சந்தைக்கு செல்ல ரயில்வேகீழ் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறிய பாதையாக இருக்கும் இதில் இருச்சக்கர வாகனங்களில் அதிகளவில் சென்று வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் பெய்த மழையால் இந்த ரயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருச்சக்கர வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

The post தஞ்சாவூர் ரயில்வே கீழ்பாலத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Chantapillai Gate ,Puchanthai ,Agni Nakshatra ,Dinakaran ,
× RELATED முன்னாள் படைவீரர்கள் குறைதீர் முகாம்