×

திருச்சுழி அருகே ஊரணியில் குளிக்க சென்றவர் பலி

திருச்சுழி, ஜூன் 9: திருச்சுழி அருகேயுள்ள ராமசாமிபட்டியை சேர்ந்தவர் பெருமாள் (48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு பிரஷர் இருந்ததாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர் ஊர் அருகேயுள்ள ஊரணியில் குளிக்க சென்றுள்ளார். குளிக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெருமாள் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post திருச்சுழி அருகே ஊரணியில் குளிக்க சென்றவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruchuzhi ,Perumal ,Ramasamibari ,Dinakaran ,
× RELATED செல்வ வளம் பெருக பெருமாள் வழிபாடு..!!