×

கந்தசாமி கோயிலில் மண்டல பூஜை நிறைவு

மல்லசமுத்திரம், ஜூன் 9: காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், 48 நாள் மண்ல பூஜை விழா நேற்றுடன் முடிந்தது. சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், கடந்த 19ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையடுத்து, தினந்தோறும் மண்டல பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம், வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் நெய் தீபமிட்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post கந்தசாமி கோயிலில் மண்டல பூஜை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Mandal Puja ,Kandasamy Temple ,Mallasamutram ,Manla Puja festival ,Kalipatti Kandasamy Temple ,Kumbabishek ,Salem-Namakkal district ,Mandal Pooja ,
× RELATED பூந்தமல்லி நகராட்சி, திருப்போரூர்...