×

விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் ; 2 பேர் கைது

சோமனூர், ஜூலை 9: கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோமனூர் பகுதியில் உள்ள கடை வீதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் டோரா (30), அபிஷித் டோரா (27) ஆகிய இருவர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 87 நபர்கள் மீது 52 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 113.945 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் ; 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Somanur ,Periyanayakanpalayam Prohibition Enforcement Division ,Karumathambatti ,Dinakaran ,
× RELATED மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு