×

தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ.1,520 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,650க்கும், சவரனுக்கு ரூ.1520 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,840க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,720க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலையில் அதிரடியாக சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.6,650க்கும், சவரனுக்கு ரூ.1520 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200க்கும் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை தங்கம் மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

The post தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ.1,520 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED சென்னையில் பதுங்கி இருந்த கொலை குற்றவாளி கைது