×

டென்மார்க் பெண் பிரதமர் மீது தாக்குதல்: மர்ம நபரை கைது செய்தது போலீஸ்


கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் மர்ம நபரால் தாக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். டென்மார்க் நாட்டின் பிரதமராக இருந்து வருபவர் மெட்டே பிரடெரிக்சன். இவர் நேற்று கோபன்ஹேகன் சதுக்கத்தில் ஒரு நபரால் தாக்கப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு பிரதமரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். மேலும் தாக்குதல் நடத்தியவரை கைது செய்தனர்.இந்த தாக்குதலில் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனுக்குகாயம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

இருப்பினும் இந்த சம்பவத்தால் பிரதமர் அதிர்ச்சியடைந்துள்ளார் என்று அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமரை தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டு இருந்தாலும், அவரைப்பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் டேன்ஸ் வாக்கெடுப்புக்குச் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

The post டென்மார்க் பெண் பிரதமர் மீது தாக்குதல்: மர்ம நபரை கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Copenhagen ,Denmark ,Mette Frederiksen ,Copenhagen Square ,
× RELATED ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவி அசத்தல்