புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகி விட்டது எனக்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஒப்புக் கொண்டுள்ளார். மக்களவை தேர்தல் தொடர்பாக அனைத்து ஊடகங்களும் பா.ஜ 350 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்று தெரிவித்தன. இதே ேபால் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், இந்த முறை பாஜ 2019 தேர்தலில் பெற்ற இடங்களை விட கூடுதல் இடங்களில் வெல்லும்’ என்று தெரிவித்தார். ஆனால் பா.ஜவால் தனிப்பெரும்பான்மை கூட பெற முடியவில்லை. இதுபற்றிய கேள்விக்கு பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: நான் எனது கணிப்பைத்தான் உங்கள் முன் வைத்தேன்.
என்னுடைய கணிப்பு எண்களின் அடிப்படையில் 20 சதவீதம் தவறாகிவிட்டது என்பதை உங்கள் அனைவர் முன்பும் நான் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். பாஜவுக்கு 300க்கு மேல் சீட்கள் கிடைக்கும் என்று நாங்கள் சொன்னோம். ஆனால் அவர்களுக்கு 240 தான் கிடைத்தது. இப்போது நாங்கள் கூறியது தவறு என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இதுவரை நான் அப்படி பேசியதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் தான், நான் எண்ணிக்கை அடிப்படையில் பேசி தவறு செய்துவிட்டேன். இனி எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
The post என் கணிப்பு தவறிவிட்டது; இனிமேல் எண்ணிக்கை குறித்து பேசமாட்டேன்: பிரசாந்த் கிஷோர் சொல்கிறார் appeared first on Dinakaran.