×

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 70 வீடு, சோதனை சாவடி எரிப்பு: எஸ்பி அதிரடி இடமாற்றம்

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. 70 வீடுகள், சோதனை சாவடிக்கு நள்ளிரவில் மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்கத்தொடங்கி உள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள சோடோபெக்ரா பகுதியில் பராக் நதிக்கரை அருகே போலீசாரின் சோதனை சாவடி அமைந்திருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிரவாதிகள் இந்த சோதனை சாவடிக்கு தீ வைத்தனர். மேலும் அந்த பகுதியில் அமைந்திருந்த சுமார் 70 வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

இதனால் நள்ளிரவில் பொதுமக்கள் அலறி கூச்சலிட்டனர். வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மணிப்பூர் காவல்துறையின் கமாண்டோ குழு விமானம் மூலமாக ஜிரிபாம் விரைந்துள்ளது. வியாழன்று 59வயது முதியவர் தீவிரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களால் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் மெய்தி சமூகத்தை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏறத்தாழ சுமார் 239 பேர் கிராமங்களில் இருந்து வெளியேறினார்கள்.

அவர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் நேற்று காலை சோதனை சாவடிக்கு தீ வைக்கப்பட்ட சில மணி நேரங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் சிங் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளார். அவர் மணிப்பூல் காவலர் பயிற்சி கல்லூரியின் கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 70 வீடு, சோதனை சாவடி எரிப்பு: எஸ்பி அதிரடி இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,70 House ,Imphal ,SP ,Jiribam… ,Houses ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் முதல்வர் வீடு அருகே பயங்கர தீ விபத்து