×

அதிமுக கிளை செயலாளர் மனைவியுடன் தற்கொலை

சங்கரன்கோவில்: அதிமுக கிளை செயலாளர், மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி பகுதியை சேர்ந்தவர் ராமதுரை (65), அதிமுக கிளப்பாக்குளம் கிளை செயலாளர். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார். இவரது மனைவி வெள்ளத்துரைச்சி(50). கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்னையில், தம்பதியர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமதுரை, வெள்ளத்துரைச்சி ஆகியோர் பூச்சிமருந்தை குடித்துவிட்டனர். மயங்கி கிடந்தவர்களை உறவினர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தம்பதியர் உயிரிழந்தனர்.

The post அதிமுக கிளை செயலாளர் மனைவியுடன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Sankarankoil ,Ramadurai ,Klappakulam ,Sankarankovil ,NGO Colony ,Tenkasi district ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டல் வருவாய் ஆய்வாளர் கைது