×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்: சென்னையில் இன்று மாலை நடக்கிறது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் வாரி சுருட்டி மீண்டும் வரலாற்று சாதனை படைத்தது. இதில் திமுக மட்டும் 21 தொகுதிகளில் வெற்றி வாகை சூட்டியது. இந்த எம்.பி.க்களில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர். திமுகவின் இந்த வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

இந்த வெற்றியின் மூலம் அகில இந்திய அளவில் திமுக 5வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதே போல எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இரு கட்சிகளுமே பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் கூட்டம் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்பிக்கள் பங்கேற்கின்றர். இந்த கூட்டத்தில் மக்களவையில் திமுக எம்பிக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்க உள்ளார். மேலும் திமுக எம்பிக்கள் குழு தலைவர், பொருளாளர் உள்ளிட்ேடார் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்: சென்னையில் இன்று மாலை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Principal Mu. K. ,Dimuka ,Stalin ,Chennai ,Anna Entwalaya, Chennai ,Lok ,Sabha ,Tamil Nadu ,Puducherry ,M.U. ,
× RELATED இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித்...