×

நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் கண்கலங்கிய டிஆர். பாலு எம்பி

ஆலந்தூர் பெரும்புதூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 4 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதையடுத்து பெரும்புதூர், ஆலந்தூர், தாம்பரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வெற்றிக்கு பாடுபட்ட திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி பரங்கிமலையில் உள்ள உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அமைச்சரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளருமான தா.மோ. அன்பரசன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி, துணை தலைவர் இ.கருணாநிதி எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் பி.குணாளன், என்.சந்திரன், ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், ஜெயக்குமார். ஜி.கே.ரவி, வந்தே மாதரம் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், டி.ஆர்.பாலு எம்பி பேசும்போது,‘‘மழை, வெயில், இரவு, பகல் பாராமல் எனது வெற்றிக்கு பாடுபட்ட உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு ஆற்றவேண்டிய ஆக்கப்பூர்வ பணிகளை ஆற்றிக்கொண்டுதான் இருப்பேன்’ என்று தழுதழுத்த குரலில் பேசும்போது கண் கலங்கினார். அப்போது அமைச்சர் தா.மோ அன்பரசன் சென்று அவரை அமரவைத்தார்.

 

The post நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் கண்கலங்கிய டிஆர். பாலு எம்பி appeared first on Dinakaran.

Tags : DR ,Balu Mp ,Alandur ,Parliamentary ,DMK ,Balu ,Perumbudur ,Tambaram ,Parangimalai ,DR. ,
× RELATED ராஜபாளையம் வாக்காளர்களுக்கு தென்காசி தொகுதி எம்பி நன்றி