×

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று காங்.செயற்குழுவில் தீர்மானம்

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று காங்.செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவரை தேர்வு செய்ய இன்று மாலை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எம்.பிக்கள் கூட்டத்துக்கு முன்பு நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல்காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாலை நடைபெறும் காங். எம்பிக்கள் கூட்டத்தில் கட்சியின் மக்களவை குழு தலைவராக ராகுல் முறைப்படி தேர்வாக வாய்ப்பு உள்ளது.

 

The post மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று காங்.செயற்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Kang ,Rakulkanti ,Delhi ,Rakulkhandi ,Congress party ,M. ,Congress ,Dinakaran ,
× RELATED மேற்குவங்கத்தை நிர்மலா...