×

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கம் மக்கள் குறைதீர் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும்

 

தஞ்சாவூர், ஜூன் 8: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் இனிமேல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என்று கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் 6.6.2024 அன்று விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிரதி வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்களும், கிராம பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை வழக்கம்போல் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

 

The post தேர்தல் நடத்தை விதிகள் விலக்கம் மக்கள் குறைதீர் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Collector ,Deepak Jacob ,Lok Sabha ,India ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுலகத்தில் மக்கள் குறைதீர்நாளில் 565 மனுக்கள்