×

அருப்புக்கோட்டையில் பட்டா வேண்டுவோர் நகராட்சியை அணுகலாம்

 

விருதுநகர், ஜூன் 8: அருப்புக்கோட்டையில், பட்டா தேவைப்படுவோர் நகராட்சி அலுவலகத்தை அணுக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகரில், வார்டு இ பிளாக் 5ல் உள்ளடக்கிய பகுதிகளில் நகர நில அளவை புலங்களுக்கு நகர நிலவரித்திட்டத்தின் கீழ் வருவாய் பின் தொடர்பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்களது கிரைய ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட வீட்டுமனைகளுக்கு கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா பெறவும், பாகவிஸ்தி பத்திரங்கள் அடிப்படையில் தனிப்பட்டா பெறவும் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், கிரையம் பெற்றது முதல் தற்போது வரை பட்டா மாற்றம் செய்யாமல் இருப்பவர்கள், தங்களிடம் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணங்களின் நகல்களுடன் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு கிரைய ஆவணம் மற்றும் மூல ஆவண நகல், வில்லங்க சான்று, ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இறப்பு மற்றும் வாரிசு சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post அருப்புக்கோட்டையில் பட்டா வேண்டுவோர் நகராட்சியை அணுகலாம் appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,Virudhunagar ,Ward E Block 5 ,
× RELATED 200 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது