×

பல்வேறு ரயில் நிலைய தண்டவாளங்களில் கிடந்த மனித உறுப்புகள்

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலைய முதலாவது பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் நேற்று துண்டிக்கப்பட்ட மனித கால் ஒன்று கிடந்தது. தகவலறிந்து வந்த ரயில் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த புக்கிரவாரி அருகே தண்டவாளத்தில் மற்றொரு காலும், கூத்தக்குடி ரயில் நிலையம் அருகே சிதைந்த நிலையில் குடலும், அதே பகுதியில் சிறிது தூரத்தில் உடலும் சிதைந்து கிடந்தது.

அப்பகுதியில் கிடந்த துணி மற்றும் அதில் இருந்த சில தகவல்களை வைத்து போலீசார் விசாரித்தபோது, இறந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அல்லி முத்து மகன் ராமச்சந்திரன் (45) என்பது தெரியவந்தது. இவர் தற்கொலை செய்தாரா? விபத்தில் இறந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பல்வேறு ரயில் நிலைய தண்டவாளங்களில் கிடந்த மனித உறுப்புகள் appeared first on Dinakaran.

Tags : Voorthasalam ,Kallakurichi district ,Bukhrawari ,Chinnesalam ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் விவகாரம்:...